Wednesday, August 24, 2011

நீங்களும் டாக்டர்தான்

நீங்களும் டாக்டர்தான்




சிறு சிறு விஷயத்துக்கு எல்லாம் டாக்டரை பார்பது என்பது தேவையில்லை. உங்கள் உடம்பை நீங்களே கவனித்துகொள்ளலாம். உங்களுக்கேன சில மருத்துவ குறிப்புகள்.


  1. உலர்ந்த திராட்சையை சிறிது சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் நல்ல மிளகு பொடி கலந்து மென்று சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.



  1. ஒரு கப் வெள்ளரிச்சாற்றுடன் ஒரு தேன் கரண்டி எலுமிச்சபழச் சாறு மற்றும் சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்


  1. காய வைத்த துளசி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த கசாயத்தில் பால் மற்றும் தேன் கலந்து அருந்தினால் சுவாசக் கோளாறுகள் நீங்கும்.


  1. தீமையான புகை/ போதை பழக்கத்திலிருந்து விடுபடுவது பாதுகாப்பு. இந்த பழக்கம் கொண்டவர்களுக்கு அடிகடி தலை கிறுகிறுப்பு இருக்கும். கொத்தமல்லி விதைகளை வறுத்து பொடித்து தண்ணிரில்(தண்னீனா பச்சை தண்ணினு அர்த்தம்) கலந்து அருந்தினால் கிறுகிறுப்பு மறையும்.


  1. கொஞ்சம் அகத்திகீரையை பச்சையாக மென்று தின்றால் தொண்டை புண், பல் நோய்கள் கட்டுபடும்.


  1. கறிவேப்பிலையை அரைத்து நெல்லி அளவு எடுத்து ஒரு கப் தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் சீதபேதி நீங்கும்.

Wednesday, March 9, 2011

உலகின் அனைத்து நாட்களின் தொலைபேசி குறியீட்டு எண்ணை அறிந்து கொள்ள


உலகின் எந்த நாட்டிற்கு நாம் phone-ல் பேச வேண்டுமோ அந்த
நாட்டு போன் குறியீட்டு எண்ணை கொடுப்பதற்காக எந்த
விளம்பரமும் இல்லாமல் பிரத்யேகமாக ஒரு தளம்
உருவாக்கப்பட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
உலகின் அனைத்து நாட்களின் தொலைபேசி குறியீட்டு எண்ணை
கொடுப்பதற்கு பல தளங்கள் இருந்தாலும் நாம் அந்தத் தளத்திற்கு
சென்று தொலைபேசி குறியீட்டு எண்ணை கண்டுபிடிப்பது சற்று
சிரமமான ஒன்று தான். சிரமமே இல்லாமல் எந்த நாட்டின்
தொலைபேசி குறியீட்டு எண்ணையும் நொடியில் அறிந்து கொள்ள
வசதியாக நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.simplecountrycodes.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி  Step 1. What
country are you calling? என்பதில் எந்த நாட்டிற்கு நாம் பேச வேண்டுமோ
அதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். Step 2. What country are you in?
என்பதில் நாம் எந்த நாட்டில் இருந்து கொண்டு பேசவேண்டுமோ
அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு Lookup Coundry code என்ற
பொத்தானை சொடுக்கினால் அடுத்து வரும் திரையில் நாம்
எந்த நாட்டிற்கான தொலைபேசி குறியீட்டு எண் வேண்டும் என்று
கேட்டோமோ அந்த நாட்டிற்கான குறியீட்டு எண் காட்டப்பட்டிருக்கும்,
எந்த விளம்பரமும் இல்லாமல் நேரடியாக அதுவும் மிக எளிமையாக
உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத்தளம் நம் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.


மங்காத்தாவில் பின்லேடன்!



தலைப்பை பார்த்தும் பயந்துவிடாதீர்கள். மங்காத்தாவில் பின்லேடன் என்றதும் அல்-குவைதா பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தான் படத்தில் நடிக்கிறார் என்று. மங்காத்தா படத்தில் ஒரு பாடலில் வாடா... பின்லேடா... என்ற வார்த்தையை போட்டு ஒரு பாடலை உருவாக்கி இருக்கின்றனர் மங்காத்தா டீம்.

தயாநிதி அழகிரி தயாரிப்பில், அஜீத்-த்ரிஷா நடிப்பில், டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் படம் மங்காத்தா. அஜீத்தின் 50வது படமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை முடித்துவிட்ட டைரக்டர் வெங்கட் பிரபு, பாடல் காட்சிகளை சூட்டிங் செய்து வருகிறார். இப்படத்தில் பாடல் ஒன்றில் வா..டா. பின்லேடா... என்பது போன்று ஒரு பாடலை கம்போசிங் செய்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

இப்பாடலை பின்னணி பாடகர்கள் கிரிஷ் மற்றும் சுஜித்திரா ஆகியோர் பாட, அதற்கு அஜீத்தும்-த்ரிஷாவும் சேர்ந்து ரொமான்ஸ் செய்வது போன்று காட்சியை உருவாக்கியுள்ளார் வெங்கட்பிரபு. நிச்சயமாக படத்தின் ஹைலைட்டாக இந்தபாடல் இருக்கும் என்று கூறுகிறார்கள். ‌மேலும் படத்தின் பெரும்பகுதியை வெங்கட்பிரபு முடித்துவிட்டதால், மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

Saturday, November 27, 2010

நரேந்திமோடி மோசமான தலைவர் என்று விமர்சனம்: ராகுல்காந்தி பேச்சுக்கு மாணவர்கள் எதிர்ப்பு



குஜராத் முதல்- மந்திரியை மிக மோசமான தலைவர் என்று ராகுல் காந்தி ஒப்பிட்டதால் ஆவேசம் அடைந்த மாணவர்கள் அவருடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக, கலந்துரையாடல் நிகழ்ச்சி பாதியில் முடிந்தது.

வருங்கால பிரதமர் என்று காங்கிரஸ் தலைவர்களால் முன்னிலைப்படுத்தப்படும் ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்தி வருகிறார்.

தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் ராகுல், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மாணவர்களை சந்தித்து உரையாடி வருகிறார். நரேந்திரமோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்றுவரும் மாநிலமான குஜராத்தில், ராகுல் காந்தி நேற்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

நேற்று காலை, ஆமதாபாத்தில் உள்ள தாக்கர்பாய் தேசாய் அரங்கில் மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக, ஆமதாபாத் நகரை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் இருந்து 700 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ராகுல், ஒரு கட்டத்தில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை, சீனாவின் மாசேதுங் போன்ற `மிக மோசமான தலைவர்' என்று விமர்சித்தார். ராகுலின் இந்த பதில் சில மாணவர்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியது.

அந்த மாணவர்கள் ராகுலுடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "கோத்ரா கலவரம் நடந்தபோது உள்ள நிலை தற்போது இல்லை. எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்து மேம்பட்ட நிலையில் குஜராத் மாநிலம் உள்ளது என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

"மோசமான பல தலைவர்கள் இதுபோல் வளர்ச்சிப்பணிகளை செய்து இருக்கிறார்கள். நரேந்திரமோடி எவ்வளவுதான் நல்ல திட்டங்களை நிறைவேற்றினாலும், `கோத்ரா' கலவரத்தின்போது அவர் மீது படிந்த கறை விலகாது'' என்று ராகுல் பதிலடி கொடுத்தார்.

மாணவர்களும் விடாமல், "வாரிசு அரசியல் மூலம்தானே நீங்கள் கட்சியில் அதிகாரம் செலுத்தும் நிலைக்கு வந்து இருக்கிறீர்கள்? அப்படி இருக்கும்போது, காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தை கொண்டு வர நீங்கள் முயற்சிப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?'' என்று கேள்விக்கணை தொடுத்தனர்.

அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை சூசகமாக உணர்த்தி, "வாரிசு அரசியலை மாற்ற முயன்ற எனது தந்தைதான் எனது `ரோல் மாடல்' தலைவர். காங்கிரசில் இந்த பொறுப்புக்கு வருவதற்காக நான் கொடுத்துள்ள விலை அதிகம்'' என்று குறிப்பிட்டார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி சூடாக மாறத் தொடங்கியதால், அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாக முடித்துக்கொள்ள முயன்றனர். சில மாணவர்களிடம் இருந்து `மைக்'குகளும் பறிக்கப்பட்டன. ராகுல் காந்தியும், மேற்கொண்டு மாணவர்களுடன் விவாதத்தை தவிர்த்து அவசரமாக வெளியேறினார்.

இதனால் மாணவர்களின் கலந்துரையாடல் பாதியிலேயே முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்காக, காலை 8.30 மணிக்கே மாணவர்கள் அனைவரும் அரங்கில் கூடி இருந்தனர். ஆனால் விமானம் தாமதமாக வந்ததால், 11 மணிக்குத்தான் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வணக்கம் நர்பர்களே, நான் பதிவுலகத்திற்கு புதுசு, ரொம்ப நாளா பதிவு எழுத ஆசை, எப்படி எழுதுறதுன்னு தெரியல, யாரவது ஐடியா குடுங்கப்பா.